பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர்
இலங்கை - இந்திய இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து ஆராயும் முகமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் நாட்டை வந்தடைந்துள்ளார்..
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடியின் புதிய அரசாங்கத்தின்கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையின் அடிப்படையாக அவரின் முதல் விஜயம் அமைந்துள்ளது.
கடல்மார்க்கமாக மிகவும் நெருக்கமான அயல் நாடாகவும் காலங்காலமாக நல்லுறவைக் கொண்ட இலங்கைக்கு இந்தியாவினது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்டும் முகமாக இந்த விஜயம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த விஜயத்தின் போது அவர், பிரதமர் தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, உள்ளிட்ட பல பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டு சகல உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 109 வீடுகளையும் மெய்நிகர் ஊடாக உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது டில்லி விஜயத்தின் போது இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்டில் அவர் இலங்கை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அது குறித்து ஆராய்வது காலநிதி ஜெய்சங்கரின் விஜயத்தில் முக்கிய அம்சமென்பதும் குறிப்பிடத்தக்கது
000