Category:
Created:
Updated:
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,250க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 1 முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை 1,267 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலகட்டத்தில், நாடு முழுவதும் 24 சோதனைகள் நடத்தப்பட்டு 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் பொலிஸ் அதிகாரிகள் ஆவர்.
கடந்த ஆண்டில் 24 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் 21 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
000