Category:
Created:
Updated:
கனடாவில், ஓரோ-மேடோன்டே பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, ஹைவே 11 சாலையின் ஒரு பகுதி இரு திசைகளிலும் மூடப்பட்டது.
மாலை 3.30 மணியளவில் ஒன்டாரியோ மாகாண காவல்துறையான OPP சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிவிப்பின் படி, ஹைவே 11 சாலையின் வடக்கு மற்றும் தெற்கு வழித்தடங்கள், லைன் 12 மற்றும் லைன் 14 இடையே ஏற்பட்ட விபத்தினால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்தில் தற்போது காவல்துறை மற்றும் அவசர சேவை குழுக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. வாகனங்களை சைட்ரோட் 15, 16 East மற்றும் Ridge Road East வழியாக மாற்றி செலுத்துகிறார்கள். மாலை 6:00 மணியளவில் தெற்கு திசை சாலை மீண்டும் திறக்கப்பட்டது.