
வேலணை NPP வேட்பாளர் சதீஸ் பாரிய ஊழல் மோசடி - குமுறும் தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள்
ஊர்காவற்துறை தனியார் போகுவரத்து சங்கத்தின் தலைவர் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் நடவடிக்கையில் பேருந்துகளை ஈடுபடுத்துவதில் பெரும் ஊழல் மோசடி செய்தமை
அம்பலமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊர்காவற்றுறை தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஊறுகையில் -
அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வேலணை பிரதேச சபைக்கான வேட்பாளரும் ஊர்காவற்றுறை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவருமான சதீஸ்குமாரே இவ்வாறு குறித்த ஊழல் மோசடியை செய்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் கூறினர்.
உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் நடவடிக்கையில் பேருந்துகளை ஈடுபடுத்துவதற்காக சில எண்ணிக்கையான பேருந்துகளை வழங்குமாறு யாழ் மாவட்ட தனியார் பேருந்து சங்கத்திடம் யாழ் மாவட்ட தேர்தல் அத்தியட்சகரால் கோரப்படது
யாழ்ப்பாணத்தின் பிராந்திய சாலைகளிலிருந்து தனியார் பேருந்துகளை வழங்குமாறும் அவற்றின் தகவலை தம்மிடம் அனுப்புமாறும் மாவட்ட தனியார் பேருந்து சங்கம் கோரியுள்ளது.
இந்நிலையில் ஊர்காவற்றுறை சாலையிலிருந்து 3 தனியார் பேருந்துகளை வழங்குமாறு அச்சங்கத்தின் தலைவரான சதீஸ்குமாருக்கு மாவட்ட சங்கத்தால் அறிவுறுத்தப்படது.
16 பேருந்துகள் இருக்கும் குறித்த ஊர்காவற்றை தனியார் சங்கம் அந்த வாய்ப்பை குலுக்கல் முறையில் முதல் மூன்று பேருந்துகளை தெரிவுசெய்து விபரங்களை வழங்கியது.
இந்நிலையில் மீண்டும் மேலதிகமாக ஒரு பேருந்தை வழங்குமாறு கோரப்பட நிலையில் ஏற்கனவே குலுக்கலில் 4ஆம் இடத்தில் இருந்த பேருந்துக்கு வாய்ப்பை வழங்காது சங்கத்தின் தலைவர் சதீஸ்குமார் இரகசியமாக குலுக்கலில் இறுதி நிலையில் இருக்கக்கூடிய தனது ND 8632 என்ற இலக்கமுடைய பேருந்தை சங்கத்தினருக்கு அறிவிக்காது தனது சுயநலம், மறைமுக தேர்தல் விளம்பரம் உள்ளுட்ட நோக்கத்தை மையமாக கொண்டு வழங்கியுள்ளார்.
இதனால் குறித்த சங்கத்தில் ஏனைய உரிமையாளர்கள் குழப்பமடைந்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும்போதே அதிகாத துஸ்பிரயோகம் மற்றும் ஊழல் மோசடியை செய்ய ஆரம்பித்துள்ள இந்த சதீஸ்குமார், ஆச்சியதிகாரத்தில் வந்தால் எப்படியெல்லாம் பித்தலாட்டங்கள் ஊழல் மோசடியை செய்வார் என்பதை மக்கள். சிந்திப்பது அவடியம்.
எனவே இந்தா ஊழல்வாதியையும் அவரது தேசிய மக்கள் சக்தியையும் மக்கள் வேலணை மண்ணிலிருந்து துரத்தவேண்டியது அவசியம்.
000