கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைவடைந்த இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை - இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு என மகப்பேற்று மருத்துவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தகவல்
கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100,000 இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகப்பேற்று மருத்துவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறப்பு எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி 2017 ஆம் ஆண்டு இலங்கையில் 325,000 பேர் பிறந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 247,000ஆக குறைவடைந்துள்ளது.
இதற்கிடையில் ஆண்டு இறப்புகள் 2017 இல் 146,000 இலிருந்து 2023 இல் 181,000ஆக அதிகரித்திருந்தன.
திருமணமான பல தம்பதிகள் கருவுற்ற காலத்தில் இலங்கையையை விட்டு வெளியேறியதே பிறப்புகள் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதமாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேநேரம் கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00