Category:
Created:
Updated:
பிளஸ் 2 தேர்வு நிச்சயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 29 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் கடந்த 10ஆம தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் மே மாதம் நடைபெற இருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிச்சயம் பிளஸ் 2 தேர்வு நடைபெறும் என கூறியுள்ளார்.