சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  1293 news
  •  ·  0 friends
  • 1 followers

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டம் - 19 ஆம் திகதி அன்று ஜனாதிபதி தலைமையில் முன்னெடுப்பு

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, பொருளாதார சிரமங்களோடு கல்வி மற்றும் இணைப்பாடவிதானங்களில் விசேட திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்கள், தமது கல்வியைத் தொடர்வதற்காக ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 6000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது.  இதற்கமைய கொழும்பு மாவட்டத்திற்கு 242 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

அதன்படி, புலமைப்பரிசில் பெறும் அனைவருக்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையுடன் உரிய புலமைப்பரிசில் எதிர்வரும் 19ஆம் திகதி வழங்கப்படும்.

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தரம் 01 முதல் தரம் 11 வரையான 100,000 பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் படி, கொழும்பு மாவட்டத்தில் சுமார் 5,000 புலமைப்பரிசில்கள் வழங்கப்பட உள்ளன.

ஏற்கனவே வலயக் கல்வி அலுவலகங்களால் ஜனாதிபதி நிதியத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புலமைப்பரிசில் வழங்கத் தகுதிபெற்றவர்களின் பட்டியலின்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள 396 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 1758 மாணவர்களுக்கு நிலுவைத் தொகையுடன் புலமைப்பரிசில்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் புலமைப்பரிசில் பெறுவது குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும்.

மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ (Facebook) முகநூல் பக்கத்தில் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும். எவ்வாறாயினும், கொழும்பு மாவட்டத்தில் உள்ள புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு, நிலுவையில் உள்ள புலமைப்பரிசில் தொகை இன்னும் ஒரு சில தினங்களில் வங்கியில் வைப்பிலிடப்பட்டு, அந்தந்த புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு குறுந்தகவல் (SMS) மூலம் அறிவிக்கப்படும்.

இதற்கு இணையாக ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 780
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads