Category:
Created:
Updated:
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சென்ற படகில், 11 பாக்கெட்டுகளில் 21 கிலோ எடை கொண்ட வெள்ளிக்கொலுசுகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் வெள்ளிக்கொலுசு மற்றும் படகை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி இனிகோநகரை சேர்ந்த பட்டுராஜ் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட பட்டுராஜை சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாரிமுத்து, விஜி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.