Category:
Created:
Updated:
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல்வேறு படங்களில் நடித்து வந்தவர் நெல்லை சிவா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக இன்று மாலை 6 மணிக்கு காலமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருடைய இறுதி ஊர்வலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான பணகுடியில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.