Category:
Created:
Updated:
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் 3ஆம் இடத்தில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் 3ஆம் இடத்தில் உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், ஓடிசா, பஞ்சாப், புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் பெங்களூரு, சென்னை, ஏர்ணாகுளம், மலாப்புரத்தில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, உ.பி. ராஜஸ்தான், அரியானா, பீகார், குஜராத் மாநிலங்களில் கொரோனா குறைந்து வருகிறது.