சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பண்டாரநாயக்க குடும்பத்தின் நிலைமையே ராஜபக்ஷர்களுக்கும் ஏற்படும் என கம்மன்பில

நாட்டில் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் கதியே ராஜபக்ச குடும்பத்திற்கும் ஏற்படும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு உதய கம்மன்பில இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மெலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அது ஜனாதிபதிக்கும், நாட்டுக்கும் பாதகமாக அமையும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தொடர்ந்து வலியுறுத்திவந்தார். ஆனால் அதற்கு ரணில் விக்கிரமசிங்க 113 உறுப்பினர்களின் ஆதரவை கையெழுத்துக்கள் ஊடாக உறுதிப்படுத்திக் கொண்டு வாருங்கள் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என பசிலிடம் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கு பஷில் ராஜபக்ஷ எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி பக்கம் இணைந்துள்ளனர். ஆகவே அந்த கட்சியின் தலைவர் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ராஜபக்ஷர்களிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் நிலைமை தமக்கும் ஏற்படுமோ என ராஜபக்ஷர்கள் அச்சமடைகிறார்கள்.

நாட்டு மக்கள் தமது பக்கமே நிற்கிறார்கள் என நினைத்துக் கொண்டுள்ள பொதுஜன பெரமுனவுக்கு இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தினை வழங்குவார்கள்” என உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

  • 538
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads