Ads
பாரிய மரம் ஒன்று நேற்று இரவு சாய்ந்ததால் முன் பள்ளி கூரை உடைந்து சிதறியது.
இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட மின்னா பிரிவில் நேற்று இரவு இடம் பெற்று உள்ளது.
இந்த முன் பள்ளியில் 15 சிறார்கள் கல்வி பயின்று வருவதாக அப் பள்ளி ஆசிரியர் செல்வி. பத்மராணி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் இன்று அதிகாலை வேளை பள்ளி அருகில் இருந்த பாரிய டேப்பன் டையின் மரம் சரிந்து விழுந்து உள்ளது .
அதனால் முன் பள்ளி கூரைக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் பாடசாலை வேலையில் இடம் பெற்று இருந்தால் முன் பள்ளி மாணவர்கள் பாதிக்கபட்டு இருப்பார்கள்.
தெய்வாதீனமாக அதிகாலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து நோர்வூட் பிரதேச செயலாளர் உடன் கவனம் செலுத்த வேண்டும் என அப் பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Info
Ads
Latest News
Ads