Ads
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் 29 பேர் தனிமைப்படுத்தலில்..
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் திட்டமிடல் கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் 29 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை திட்டமிடல் கிளையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம் திட்டமிடல் கிளையில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே சுகாதார உத்தியோகத்தர்களால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை,ஊர்காவற்றையில் நேற்றைய நாள் விளையாட்டுக்கழக மைதானம் ஒன்றில் கிரிக்கெட் விளையாடிய கிராமத்து இளைஞர்கள் இருபதுக்கும் மேற்பட்டோரும் சுகாதாரத் தரப்பினரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads