இலங்கையில் ஒரே நாளில் 26 பேர் கொரோனா தொற்றுக்கு பலி!
இலங்கையில் நேற்றைய தினம் 26 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 மே மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 10 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் தொற்று நோயாளர்களில் 26 பேர் உயிரிழந்துள்ளமையை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, நேற்று 2, 573 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 128, 479 ஆக அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 128,479 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,148 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
01. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய பெண் ஒருவர், 02. ஹெட்டிபொல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 36 வயதுடைய ஆண் ஒருவர், 03. பல்லேவல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், 04. கண்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர் , 05. மத்துகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய பெண் ஒருவர், 06. பாதுக்க பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், 07. நேபட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், 08. யாழ்ப்பாணம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 91 வயதுடைய பெண் ஒருவர், 09. யாழ்ப்பாணம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 88 வயதுடைய ஆண் ஒருவர், 10. மீகஹகொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 71 வயதுடைய ஆண் ஒருவர், 11. களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், 12. அக்குரஸ்ஸ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 45 வயதுடைய பெண் ஒருவர், 13. மொரொன்துடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 56 வயதுடைய ஆண் ஒருவர், 14. களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், 15. அநுராதபுரம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 94 வயதுடைய பெண் ஒருவர், 16. கொழும்பு 06 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 86 வயதுடைய ஆண் ஒருவர், 17. கலுஅக்கல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய பெண் ஒருவர், 18. மொரட்டுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய பெண் ஒருவர், 19. மல்வான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய ஆண் ஒருவர், 20. பொரல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 88 வயதுடைய பெண் ஒருவர், 21. கொழும்பு 15 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய ஆண் ஒருவர், 22. கந்தான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 56 வயதுடைய ஆண் ஒருவர், 23. மாஸ்வெல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 58 வயதுடைய பெண் ஒருவர், 24. நேபொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 96 வயதுடைய பெண் ஒருவர், 25. வத்தேகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட மூன்று மாத பெண் குழந்தையொருவர், 26. மாலம்பே பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர்.