சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  1293 news
  •  ·  0 friends
  • 1 followers

இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக்கொள்ள இலங்கை இரண்டு விடயங்களை பூர்த்தி செய்யவேண்டும் – IMF இன் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இரண்டு விடயங்களை பூர்த்தி செய்யவேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

வொசிங்டனில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் மதிப்பாய்வை நிறைவு செய்வதற்கு இரண்டு விடயங்கள் அவசியம்.

அரசாங்கத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்ட முன் நடவடிக்கைகளை செயற்படுத்தல். இரண்டாவது நிதி உத்தரவாதங்களின் மதிப்பாய்வை நிறைவு செய்தல் என்பதாகும்.

இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் பாராட்டத்தக்கன. விரைவான பணவீக்க வீழ்ச்சி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இதனை அவதானித்துள்ளோம்.

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் அரசாங்கத்தின் நிதி அமைப்பில் ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்கிறது.

ஒட்டுமொத்த நிரல் செயல்திறன் வலுவாக உள்ளது. நான்காண்டு கால திட்டத்தில் ஜ.எம்.எப் அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளும் இடையிலான பொருளாதாரக் கொள்கைகள் பணியாளர் அளவிலான மட்டத்தில் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

இந்த உடன்படிக்கைகள் நிறைவடைந்தால் இலங்கைக்கு சுமார் 337 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி கிடைக்கும்.

கடன் மறுசீரமைப்பைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டு தனியார் கடனாளிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.

இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கொள்கையளவில் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுகின்றது. உள்நாட்டு கடன் நடவடிக்கைகள் பெரும்பாலும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டுப் பத்திரதாரர்களுடனான ஆரம்ப கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தம் ஏதுமின்றி ஏப்ரல் நடுப்பகுதியில் நிறைவடைந்துள்ளன.

மேலும் கொள்கைகள் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் தரப்பில் இந்த ஒப்பந்தங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

தொடர்ந்து விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன” என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 505
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads