Category:
Created:
Updated:
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதில் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது நகைச்சுவை நடிகர் துளசி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
மருதுபாண்டி, உடன்பிறப்பு, தமிழச்சி, இளைஞரணி, அவதார புருஷன் போன்ற படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரையிலும் “கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி” உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.