
உள்ளூர் அதிகாரசபை தேர்தல் - ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுங்கள் - பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் பணிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி தீர்மானமொன்றை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச பணியாளர்கள் தமது கடமைகளை தொடர்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக பல தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை கருத்திற்கொண்டு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்ற அமைச்சரான பிரதமருக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00