கனடா பொதுத் தேர்தலில் இந்தியா தலையிட்டதா?
கனடாவில் கடந்த 2019 மற்றும் 2021-ல் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இந்தியா - பாகிஸ்தான் தலையிட முயன்றதாக கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியது.
இதையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் விசாரணை ஆணைய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்தன.
இந்த விசாரணையில், கனடாவின் அரசியலில் இந்தியா தலையிட முயற்சிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
2021 தேர்தலை கண்காணித்த மூத்த அதிகாரிகள் குழுவிடம், வாக்கெடுப்புகளில் செல்வாக்கு செலுத்த இந்தியா முயற்சித்தது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
2021 தேர்தலின்போது இந்திய அரசாங்கம் தனது செல்வாக்கை பிரசாரத்தில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் தகவலை நம்பவில்லை என விசாரணைக் குழுவிடம் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்.
இதேவேளை, கனடாவில் கடந்த இரண்டு தேர்தல்களிலும் சீனா தலையிட்டதாக புலனாய்வு அமைப்பு கண்டறிந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10-04-2024 விசாரணைக் குழு முன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.