தொழில் துறையில் சாதனை புரியும் இஷா அம்பானியின் வலது கை யார்?
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி(Isha Ambani) தொழில் துறையில் பெரும் சாதனை புரிந்து வருகிறார்.
8.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள Reliance Retail நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இவருக்கு, பலம்மிக்க குழு ஒன்று இருக்கிறது.
இஷா அம்பானியின் 8.3 லட்சம் கோடி நிறுவனத்தை இயக்குவதில் அவரது வலது கையாக செயல்படும் தர்ஷன் மெஹ்தாவின் பங்கு மிகப்பெரியது.
இந்தக் குழுவில் முக்கிய பங்கு வகிப்பவர் தர்ஷன் மெஹ்தா. இவர் பெரும்பாலும் இஷா அம்பானியின் வலது கை என்று அழைக்கப்படுகிறார்.
2007ம் ஆண்டு Reliance உருவாக்கப்பட்ட போது தர்ஷன் மெஹ்தா அதன் முதல் ஊழியராக சேர்க்கப்பட்டார். தர்ஷன் மெஹ்தா தற்போது ரிலையன்ஸ் பிராண்டுகளின் தலைவராக உள்ளார்.
ஒரே ஆண்டில் 3300 கடைகளை சேர்த்த ரிலையன்ஸ் ரீடெய்லின் விரிவாக்கத்தில் அவரது பங்கும் குறிப்பிடத்தக்கது. மெஹ்தாவின் வருட சம்பளம் அவரது முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
2020-21 நிதிய ஆண்டுக்கான புள்ளி விவரங்களின் படி மட்டும் அவரது ஆண்டு சம்பளம் சுமார் 4.89 கோடி ரூபாயாகும்.