சினிமா செய்திகள்
வீர தீர சூரன் பட ரிலீஸ் தேதியில் மாற்றம்
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு பிறகு ஒரு ஹிட் கொடுத்த நடிகர் என்றால் அது விக்ரம். சேது படத்திற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்து அந்த
சிகிச்சைக்கு செல்லும் முன்னர் முடி காணிக்கை செய்தார் சிவராஜ் குமார்
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொ
எம்ஜிஆரை ஜெய்சங்கர் எப்படி கூப்பிடுவாருன்னு தெரியுமா?
மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், ஏழைகளின் இதயக்கனின்னு போற்ப்பபடுபவர் எம்ஜிஆர். தனது கருத்துகள் ஒவ்வொன்றும் திரைப்படங்களில் நல்ல பயனுள
தோல்வியால் நிம்மதியை இழந்த சூர்யா
கங்குவா படம் கொடுத்த மிகப்பெரிய தோல்வியால் நிம்மதியை இழந்த சூர்யா படப்பிடிப்பு தளத்தில் சோகமாக இருந்து வருகிறாராம். மேலும் இதிலிருந்து மீண்டு வருவதற்க
47 வயதில் திருமணம் செய்து கொண்ட ‘பாகுபலி’ நடிகர்
பாகுபலி திரைப்படத்தில் நாயகி அனுஷ்காவின் மாமாவாக நடித்திருந்தவர் நடிகர் சுப்புராஜ், கோழையாக இருந்து அதன்பின் வீரமாக மாறி, வீரமரணம் அடைந்த காட்சியில் அ
நடிகை கஸ்தூரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘உதயநிதி ஸ்டாலின் சினிமா செய்திகள் குறித்து “நான் அவற்றை பார்ப்பதில்லை” என கூறினார். அவர் தனது ரெட் ஜ
ஜமீன் பரம்பரை பெண்ணை மணந்தார் காளிதாஸ் ஜெயராம்
மலையாள நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் விக்ரம், ராயன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் காளிதாஸ் ஜெயராமனுக்கு தாரணி காளிங்
சூப்பர் சிங்கரில் மாற்று திறனாளி பாடகியை பாராட்டிய நெப்போலியன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் மாற்று திறனாளி பாடகி ஒருவரின் பாடலை பாராட்டி நெப்போலியன் பேசியிருக்கிற
தமிழ் திரையிலகில் தனி முத்திரை பதித்த எம்.என்.நம்பியார்
'உங்கள் கணவர் சிகரெட் குடிக் கிறாரே, அதற்கு நீங்கள் எதுவும் ஆட்சேபனை சொன்னதில்லையா?''''இல்லீங்க. வருஷத்துக்கு ரெண்டே மாசம்தான் சிகரெட் குடிப்பார். மீத
நடிகர் நாகேஷ் பற்றி சிவகுமார் பகிர்ந்த தகவல்
நாகேஷ் நடிக்காத கம்பெனியோ -அவர் போடாத வேஷமோ- அவரை டைரக்ட் பண்ணாத டைரக்டரோ- அவர் கூட 40 வருடத்தில் நடிக்காத ஹீரோவோ யாருமே இருக்க முடியாது. 1000க்கும் ம
ஓபனாக போட்டுடைத்த தனுஷ்
தனுஷ் கோலிவுட்டில் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் சரியாக போகாவிட்டாலும் தனுஷின் நடிப்பும், ஆக்‌
இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் வடக்
Ads
 ·   ·  8083 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தரமான ஊடக தலைமுறையொன்றை உருவாக்க “Kaleidoscope 2024 Screen media for Gen-Z” திட்டம் ஆரம்பம்

ஊடகங்களின் அனுபவத்தையும் நடைமுறை அறிவையும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு “Kaledoscope 2024 Screen media for Gen-Z” என்ற கற்கைநெறியை ஆரம்பித்துள்ளது. இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் இந்த கற்கை நெறி இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள், கல்விமான்கள், ஊடகத்துறையிலுள்ள நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஊடகப் பிரிவுகள் செயற்பாட்டில் உள்ள 31 பாடசாலைகளில் இருந்து 158 மாணவர்கள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு வாரத்திற்கு ஒரு நாள் என்ற அடிப்படையில், 16 வாரங்கள் இந்த கற்கை நெறி முன்னெடுக்கப்படவுள்ளது. யுனிலீவர் லங்கா நிறுவனம், SLIT கல்வி நிறுவனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் ஆகியன இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனுசரணை வழங்குகின்றன. நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கு ஊடகப் பின்னணி தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சுதீர நிலங்க விதான, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர்களான பொறியியல் நிபுணர் ஸ்டான்லி ஹெட்டியாராச்சி மற்றும் நதீரா மடுகல்ல ஆகியோர் விளக்கமளித்தனர். மூத்த ஊடகவியலாளர் உதம் சதரசிங்க, மூத்த கலைஞர் சுதத் தேவப்பிரிய, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் ஊடகப் பிரிவின் தலைவர் பந்துல பி. தயாரத்ன ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கற்கை நெறியின் இரண்டாம் கட்டமாக, திறமையை வெளிக்காட்டும் மாணவர்களுக்கு 05 பிரிவுகளில் 06 நாட்கள் மேலதிக அறிவூட்டல்கள் வழங்கப்படவுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் இந்த பயிற்சிகளை வழங்கவுள்ளனர். இலங்கையிலுள்ள அனைத்து இலத்திரனியல் ஊடக நிறுவனங்களும் இந்த வேலைத்திட்டத்துடன் கைகோர்த்துள்ளதுடன், நிகழ்ச்சியில் பங்குபற்றும் மாணவர்கள், முன்னணி ஊடக நிறுவனங்களுக்குச் சென்று, இரண்டு நாள் நடைமுறை அறிவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் வர்த்தக நாமம் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய புரிதல் இருக்க வேண்டும் என்பதால், தனியார் துறையில் அதிக அனுபவமுள்ள நிறுவனங்களில் அந்த அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கற்கை நெறி மாணவர்களுக்கு எதிர்கால உலகிற்குப் உகந்த வகையில் புதுமையுடன் கூடிய நடைமுறை அறிவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • 760
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads