அதிகாரங்களினை தொடரும் உரிமை வழங்கும் ஆவணம்
சொத்துக்கள், உடமைகளுடன் கனடாவில் வாழும் ஒரு மனிதனின் வாழ்வில் "மரணசாசன பத்திரம்" (Last will & Testament) என்ற ஆவணம் எவ்வளவு இன்றியமையாததோ அதே போல் இன்னுமோர் ஆவணமும் சட்ட ரீதியாக கைச்சாத்திட்டு வைத்திருப்பது மிக முக்கியமானதாகும். அதனை
"அதிகாரங்களினை தொடரும் உரிமை வழங்கும் ஆவணம்" (Continuing power attorney) என குறிப்பிடப்படும்.
துரதிர்ஷ்டவசமாக தாங்கள் ஏதாவது விபத்துகளில் சிக்குண்டோ அல்லது நோய்வாய்ப்பட்டோ நிரந்தரமாக சிந்தனை செயல்களில் எவையும் தீர்மானிக்க முடியாத நிலைமைகள் அல்லது கோமா நிலைமைகளுக்குள் தள்ளப்பட்டால் தங்களின் வீடு, சொத்துக்கள், வங்கி கணக்குகள், முதலீட்டு திட்டங்கள் யாவற்றினையும் தங்கள் சார்பில் கையாளும் முழுமையான சட்ட ரீதியான அதிகாரத்தினை இன்னொருவருக்கு வழங்கும் ஆவணம் என இதனை குறிப்பிடலாம்.
இவ்வாறு தாங்கள் தங்கள் சொத்துக்கள் மீது அதிகாரத்தினை தொடரும் அதிகாரம் வழங்க ஒருவரை தெரிவு செய்யும்போது தங்களுக்கு நம்பிக்கைக்குரியவராக, உண்மையானவராக, சொத்தினை அழிவு நிலைமைக்கு எடுத்து செல்லாதளவுக்கு அனுபவமுள்ளவராக, பொறுப்பெடுத்து செய்வதில் விருப்பமுள்ளவராக இருக்கவேண்டும் என ஒண்டாரியோ மாகாண சட்டமாதிபதி அமைச்சகத்தின் இணையதள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களால் நிரந்தரமாக தெளிவற்ற நிலைமைக்கு உள்ளானால் (Incapable stage of managing property) பொதுவாக தங்களின் சொத்துக்களில் அதிகாரங்களினை தொடரும் உரிமையினை தாங்கள் எவருக்கும் வழங்கலாம் என இருந்தபோதும், குடும்பத்தில் மனைவி அல்லது கணவன் மற்றும் பிள்ளைகளுக்கே அந்த அதிகாரம் வழங்குவது மரபு ரீதியான செயல்பாடாகும்.
ஏனெனில் இங்கு நடந்த ஓர் உண்மை கதையினை உதாரணத்துக்கு சொல்லவேண்டும்போல் உள்ளது.
அந்த நபர் திடீர் என விழுந்து தலை அடிபட்டு நிரந்தரமாக கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார். மனைவியோடு கூட்டு உரிமையாளராக இருந்த அவர்கள் குடியிருக்கும் வீடு இருவரினது கையொப்பமும் இல்லாது விற்பனையும் செய்யமுடியாது. பிரதானமான நிலையிலிருந்து வருமானத்தினை கொண்டுவரும் கணவன் திடீர் என்று நிரந்தரமாக இயலாத நிலைமைக்கு தள்ளப்பட்டதால் .......தொடர்ந்து விவரமாக அறிய வீடியோவைப் பாருங்கள்