சினிமா செய்திகள்
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவராஸ்ய தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
மூத்த நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் காலமானார்
பழம்பெரும் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித
நடிகர் மாதவனும் இயக்குநர்  கே எஸ் ரவிக்குமாரும்
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் வித்தியாசமாக சுவாரசியமாக பதில் சொல்பவர், சமீபத்தில் மாதவன் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி
அரிய ஆவணம்
"7-9-1949"இடையபட்டி நேத்தாஜி பாடசாலை கட்டிட நிதிக்காககலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின்கிந்தனார்காலட்சேபம் 7-9-49 அன்று நடைபெற்றது
மனித வணக்கம்  -  கமல்ஹாசன் கவிதை
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவி
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்
விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘ல
 ‘எல் 2: எம்புரான்’ படத்தின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டது
மோகன்லால் நடித்து மார்ச் 27-ல் வெளியான படம், ‘எல் 2: எம்புரான்’. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கல
எம்ஜிஆரிடம் உதவி கேட்டுச் சென்ற கலைவாணரின் மகன்
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவ
அமிதாப்பச்சன் சந்தித்த பணப் பிரச்சனை
நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார்.அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்க வேண்ட
நகைச்சுவை நடிகர் நாகேஷ்
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில்- தன் கையால் சமைத்துப் போட்டு -மாம்பலம் க
Ads
 ·   ·  8156 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கனடா படுகொலை தொடர்பில் புதிய தகவல்

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் அடுத்த சில நாட்களில் கனடாவுக்கு வந்ததன் பின்னர் இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (09) பர்ஹாவன் பிரதேசவாசிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான Barrhaven என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பத்தின் நினைவேந்தல் நிகழ்வு தனுஷ்கவின் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இதில் உள்ளூர்வாசிகள், மகா சங்கரத்ன, இரு நாட்டு அரசு அதிகாரிகள் உட்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், விக்ரமசிங்கவின் குடும்பத்தின் நண்பர்கள் கொலைச் சம்பவம் தொடர்பாக அனுதாபத்தை வெளிப்படுத்தியதுடன் பல கனேடியர்களும் இது குறித்து கவலை வௌியிட்டுள்ளனர்.

தாக்குதலில் உயிர் பிழைத்து பலத்த காயங்களுக்கு உள்ளான தனுஷ்க விக்ரமசிங்க தற்போது இரண்டு சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று முடித்த பின்னர் அவரை கவனித்துக் கொள்வதாகவும் ஒட்டாவிலுள்ள ஹில்டா ஜயவர்த்தனாராம விகாரை அறிவித்துள்ளது. இதேவேளை உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய தனுஷ்கவின் சகோதரர் மற்றும் உறவினர்களை ஒட்டாவாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதிவாதி சட்டத்தரணியான மைக்கேல் ஜோன்ஸ்டன்  படுகொலை தொடர்பில்  கருத்து தெரிவிக்கையில்,

"இந்தச் சம்பவத்தின் அருவருப்பான தன்மையால், ஒருவரின் மனநலம் கேள்விக்குறியாகலாம். குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு வருவதற்கான தகுதியை தீர்மானிக்கவும் இது உதவும். அத்துடன் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மனநலக் கோளாறு உள்ளதா இல்லையா என்பதையும் கண்டறிய முடியும்"என்றார். கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் உள்ள இரத்தக் கறைகளை சுத்தம் செய்யும் பணியில் நேற்று கனேடிய அதிகாரிகள்  ஈடுபட்டனர்.

  • 811
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads