மரணசாசன பத்திரமில்லாது மரணமடைந்தால், அவரின் சொத்துக்களுக்கு என்ன நடக்கும் ?
கனடாவில் உள்ள அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
மரணத்தின் பின்பு மரணமாகியவரின் பெயரிலுள்ள சொத்துக்கள், உடமைகள், வங்கி கணக்குகள் எவர் எவருக்கெல்லாம் போய் சேரவேண்டும் என தெளிவான மனநிலையிலிருந்து உருவாக்கி வைக்கும் "மரணசாசன பத்திரம்" (Last Will & Testament) என்ற சட்டபூர்வமான ஆவணம் இல்லாது மரணிப்பவர்களின் நிலைமை கனடாவில் என்னவாகும்?
ஒண்டாரியோ மாகாண சட்டமாதிபதி அமைச்சகம் (Ontario Ministry of Attorney General) இவ் வினாவுக்குரிய விடையினை தெளிவு பண்ணுகின்றது.
சொத்துக்களும், வங்கி கணக்குகள், முதலீட்டு திட்டங்கள் யாவும் குடும்பத்துக்குள் கூட்டாக இருந்தால் (Joint ownership/account ) அநேகமாக இங்கு ஒருவரின் மரணத்தின் பின்பு அவை அடுத்தவருக்கு சொந்தமாகிவிடும். அந்த நிலைமையில் அநேகமாக பிரச்சனைகள் எவையும் இருக்கமாட்டாது.
இவ்வாறு கூட்டாக இல்லாமல் தனி ஒருவர் பெயரில் மட்டும் இருக்குமானால் அவரது மரணத்தின் பின்பு அவரது குடும்பத்தவர்கள் அதில் உரிமை மாற்றங்கள் என எவையும் இலகுவாக செய்துவிட முடியாது.
இப்படியான நிலைமைகளில் மாகாண அரசின்....
"விருப்ப ஆவணமில்லாது மரணமாகியவரின் வம்சாவழி சீர்திருத்த சட்டம்" (Ontario interstate succession law & reform act )
இவற்றினை எப்படி கையாள்வது என்பது பற்றி தெளிவு பண்ணுகின்றது.
மரணமாகியவரின் பெயரில் உள்ள சொத்துக்கள், வங்கி, மற்றும் முதலீட்டு திட்டங்களில் உள்ளவற்றினை பெற விரும்பும் குடும்பத்தவர்கள் இவற்றினை கையாளும் மாகாண அரசு நீதிமன்றத்துக்கு (Provincial estate probation court) வக்கீல் மூலமாக மனு செய்யவேண்டும். நீதிமன்றம் பின்வரும் ஒழுங்கு முறையில் இவற்றினை கையாளும்.
(1) மரணமாகியவரின் சொத்துக்கள், பணங்களினை பொறுப்பெடுக்கும் நீதிமன்றம் மரணமாகியவருக்கு எங்கேயாவது சட்ட ரீதியாக செலுத்தவேண்டிய கடன்கள் உள்ளதா? என்பதனை தேடி பார்த்து முதலில் அதனை கொடுத்து தீர்த்து கொள்ளும்.
(2) இரண்டாவது கட்டமாக அதன் பின்பு மிகுதியுள்ள பெறுமதியில் முதல் இரு லட்சம் தொகை பெறுமதி உயிரோடிருக்கும் தம்பதிகளில் ஒருவருக்கு போய் சேரவேண்டும். மிகுதி பெறுமதி பிள்ளைகள் இருந்தால்,,,,,,
தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள வீடியோவைப் பாருங்கள்.