தங்கள் வீடுகள் குடியிருக்காத குடிமனையல்ல என்பதனை பிரகடனப்படுத்திவிட்டீர்களா? பிரகடனப்படுத்த தவறினால் என்ன நடக்கும் ?
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நகரங்கள் உட்பட, கனடாவின் பல நகரங்களில் உள்ள வீடுகளில்,
* ஒன்றில் குடியிருக்கவேண்டும்.
* இல்லையேல் வாடகைக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
அங்கு வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாக குடியிருக்காமலிருக்கும் குடியிருப்பு மனைகளுக்கு அதன் உரிமையாளர்கள், அந்த வீட்டின் விலை மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதியில் 1% "வெற்றிட வரி" (Home vacant tax) செலுத்தவேண்டும் என்ற சட்டமூலம் கடந்த ஜனவரி/1/2022 யிலிருந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
(இங்கு விலை மதிப்பீடு என்பது ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாகாண அரசின் கீழ் செயல்படும் "நகரசபை ஆதன மதிப்பீட்டு கூட்டுத்தாபனம்" (Municipal property assessment corporation) ஒவ்வொரு வீட்டிற்கும் ஓர் விலை மதிப்பீடு செய்து அதன் பத்திரத்தினை வீட்டின் உரிமையாளருக்கு அனுப்பிவைப்பது வழமையாகும்.)
உதாரணமாக ஒரு மில்லியன் டொலருக்கு மதிப்பீடு செய்யப்பட்ட தங்கள் வீட்டினை வருடத்தில் ஆறு மாதத்திற்கு மேல் வெற்றிடமாக வைத்திருந்தால் $10,000 டொலர் வரி அரசுக்கு செலுத்தியாக வேண்டும்.
இந்த நிலமைலிருந்து ஏமாற்று வேலைகள் செய்பவர்கள், வரி செலுத்த தவறுபவர்கள் செலுத்தவேண்டிய வரிக்கு வட்டியோடு $5000 டொலர் வரை தண்டனை பணமும் செலுத்தவேண்டிவரலாம்.
ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் தங்கள் வீட்டுக்கு வரி செலுத்துமாறு அனுப்பப்படும் பத்திரத்தில் உள்ள அடையாள இலக்கத்தினை (Property tax roll number) அடையாளமாக வைத்து வருடத்தில் ......
தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள வீடியோவைப் பாருங்கள்.