Category:
Created:
Updated:
கனடாவின் முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனி தனது 84ம் வயதில் காலமானார். கனடாவின் 18ம் பிரதமராக பிரையன் முல்ரோனி கடமையாற்றியுள்ளார். முன்னாள் பிரதமர் ஜோன் டெபின்பேர்க்கரின் ஆலோசகர் என்ற அடிப்படையில் முல்ரோனி தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.
1983ம் ஆண்டு கொன்சர்வடிவ் கட்சியின் தலைவராக தெரிவாகிய முல்ரோனி, 1984ம் ஆண்டில் கனடாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
முல்ரோனி தனது பதவிக் காலத்தில் நாட்டில் பல்வேறு மாற்றங்களை செய்தவர்.சிறுபான்மை சமூகங்களுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் முல்ரோனி சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தார் என பாராட்டப்படுகின்றது.