சினிமா செய்திகள்
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது.
நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகார
மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்
உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில்
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தர
" உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்” - பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிர
முன்னழகு எடுப்பாக தெரிய புகைப்படம் வெளியிட்டார் யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் முன்னழகை முன்பு பார்க
ஈரம்சொட்டும் உடையில் மாங்காய் அடிக்கும் சிம்ரன்
சிம்ரன் நடிப்பில் வெளி வந்த நேருக்கு நேர், கண்ணெதிரே தோன்றினாள், அவள் வருவாளா, வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், பஞ்சதந்திரம், நிய
இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை தன்யா பாலகிருஷ்ணன்
நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழ், கன்னடம், மற்றும் மலையாளம் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிகமாக இவர் நடித்திருக்கிறார். இவர
சப்தம் படத்தின் டீசர் நாளை வெளியாகும்
2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஈரம். இப்படத்தில் ஆதி, ரம்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவ
விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் தி கோட்
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கோட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதாவது, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இப்படத்
Ads
 ·   ·  7477 news
  •  ·  5 friends
  • I

    9 followers

வீரமிக்க பெண்களை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பலம் சேர்க்கும் தொழில்முனைவோராக மாற்றுவோம் : சஜித் பிரேமதாச

கடந்த காலங்களில் பெண்களால் தேவேந்திர முனையிலிருந்து பேதுரு முனை வரை சிரமமின்றி பயணிக்க முடியுமாக இருந்தாலும், இன்று நாட்டில் அவ்வாறானதொரு நிலை இல்லை. சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. 2023இல் மட்டும் 9400 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 1502, பாலியல் துஷ்பிரயோகங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தோடு அவர், நமது நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர். பெண்களுக்கு பரிதாபகரமானதும் துயரமானதுமான நிலையே நிலவி வருகிறது. இது மாற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கண்டியில் இன்று (24) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நமது நாட்டில் சரியான பாதுகாப்பு, பொருத்தமான சூழல் மற்றும் கவனிப்பு இல்லாத காரணத்தால் தொழிலாளர் பரப்பில் 34% பணியாளர்களே பெண்களாக உள்ளனர். பெரும்பாலான பெண்கள் வீட்டிலும், போக்குவரத்தின் போதும், பணியிடத்திலும் பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். பொருளாதார நெருக்கடி கூட பெண்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

வீட்டின் தெய்வம் தாய் என்று அழைக்கப்பட்டாலும், குழந்தையின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தாய் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை கடுமையான பிரச்சினையாக இன்று மாறியுள்ளன. மகளிர் தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டாலும், அதில் வாக்குறுதியளிக்கப்பட்ட எதுவும் இதுவரை நடக்கவில்லை.

2019 ஜனாதிபதித் தேர்தலில் பெண்களைப் பற்றி யாரும் பேசாவிட்டாலும், பெண்களுக்கு மட்டுமான தனியான சாசனத்தை நான் தயாரித்தேன்.

இன்றைய அரசியலிலும் ஜனநாயகத்திலும் முக்கிய அடிமட்ட சக்தியாக பெண்கள் கருதப்பட்டாலும், பெண்கள் தற்போது வெறுமனே அரசியல் ஆயுதமாக்கப்பட்டுள்ளனர்.

இந்நாட்டில் உள்ள 52% பெண்கள் அரசியல்வாதிகளிடம் இருந்து விரிவுரைகளையோ, வியாக்கியானங்களையோ எதிர்பார்க்கவில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பதில்களையுமே எதிர்பார்க்கின்றனர். எனவே புகழ்ச்சிக் கதைகள், வாய் வீராப்பு கதைகளைக் கண்டு, கேட்டு ஏமாற வேண்டாம்.

ஐக்கிய மக்கள் சக்தி இம்முறையும் பெண்களுக்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திடும். இது அரசியல்வாதிகளின் கருத்துகளை மாத்திரம் கொண்டமையாது, அடிமட்ட மக்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி இது முறையாக அரசியல் சாராத ஒப்பந்தமாக வகுக்கப்படும்.

பெண்களுக்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படும். நாடளாவிய ரீதியில் உள்ள பெண்களை தொடர்புகொண்டு அவருக்கு பக்க பலத்தை வழங்கும் மகளிர் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும்.

ஒவ்வொரு கிராம சேவை அலுவலர் பிரிவுக்கும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க தேசிய போஷாக்குக் கொள்கை ஸ்தாபிக்கப்படும்.

பெண்களின் சுகாதார நலன்களை வலுப்படுத்துவோம். உரிய சுகாதார கருவிகளைப் பயன்படுத்தாததால், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் எழுவதால் அது குறித்தும் கவனம் செலுத்துவோம். பேட் மேன் என்ற புனைப்பெயர் வைத்து அழைத்தாலும் அதனை பொருட்படுத்தப்போவதில்லை.

நுண்நிதி கடனின் கீழ் கடன் பொறியில் சிக்கியுள்ள பெண்களை பாதுகாக்க தலையிட்டு, அதிலிருந்து அவர்களை விடுவித்து, வீரமிக்க பெண்களை பொருளாதார அபிவிருத்திக்கு பக்க பலத்தை நல்கும் தொழில்முனைவோராக மாற்றுவோம். பல அசௌகரியங்களுக்கு மத்தியில் உள்ள பெண்களை வீட்டுத் தலைவிகளாகக் கொண்ட வீட்டு அலகுகளை இலக்காகக் கொண்டு விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் என தெரிவித்தார்.

  • 155
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads