'நான் மலாலா அல்ல.. என் நாட்டில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்' - UK பாராளுமன்ற கட்டிடத்தை அதிரவிட்ட யானா மிர்
லண்டன் நகர பாராளுமன்றத்தில் பேசிய அவர், காஷ்மீரில் "அடக்குமுறை" பற்றிய தவறான கதைகளை பரப்பியதற்காக "டூல்கிட் வெளிநாட்டு ஊடகங்களை" அவர் கடுமையாக சாடினார். "நான் சுதந்திரமாக இருக்கிறேன், நான் எனது நாடான இந்தியாவில், இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரில் உள்ள எனது வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறேன்," என்று தன்னை காஷ்மீரின் முதல் பெண் Vlogger என்றும் யானா மிர் மேலும் கூறினார். அவர் காஷ்மீரை பிறப்பிடமாக கொண்ட பத்திரிகையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மலாலா யூசுப்சாய்?
கடந்த 2012ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில், பெண் கல்விக்கான தலிபான்களின் தடையை மீறியதற்காக மலாலா யூசுப்சாய் ஒரு தலிபானால் அவரது தலையில் சுடப்பட்டார். இந்த கொடூர தாக்குதலில் இருந்து மீண்டு மலாலா யுனைடெட் கிங்டத்திற்கு குடியேறினர். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், இறுதியில் 2014ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணாக அவர் மாறினார். அப்போது அவருக்கு வயது வெறும் 17.
இங்குதான் யானா தனக்கும், நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய்க்கும் இடையே உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டினார். "ஆனால், மலாலா யூசுப்சாய், எனது நாட்டை, எனது முன்னேறி வரும் தாயகத்தை, 'ஒடுக்கப்பட்டவர்கள்' என்றழைத்து, களங்கப்படுத்துவதை நான் எதிர்க்கிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் உள்ள அனைத்து 'டூல்கிட் உறுப்பினர்களையும்' நான் ஆட்சேபிக்கிறேன் என்றார்.
"மதத்தின் அடிப்படையில் இந்தியர்களை கணிப்பதை நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன், எங்களை உடைக்க நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம்", என்று மேலும் யானா மிர் கூறினார், "பாகிஸ்தானில் உள்ள இங்கிலாந்தில் வசிக்கும் எங்கள் குற்றவாளிகள் என் நாட்டைக் கேவலப்படுத்துவதை நிறுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார் அவர்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் இளைஞர் சங்கத்துடன் தொடர்புடைய யானா மிர், ஜம்மு காஷ்மீர் ஸ்டடி சென்டர் யுகே (ஜேகேஎஸ்சி) பிரிட்டிஷ் பாராளுமன்ற கட்டிடத்தில் நடத்திய "சங்கல்ப் திவாஸ்" நிகழ்ச்சியில் தான் இந்த உரையை நிகழ்த்தினார்.
யானா மிரின் பேச்சின் வீடியோக்கள் வைரலாகி, இங்கிலாந்தில் அவரது ஆவேச பேச்சுக்காக மக்கள் அவரை பாராட்டியுள்ளனர். காஷ்மீர் பாஜக ஊடகப் பொறுப்பாளர் சஜித் யூசுப் ஷாவுக்கு நன்றி தெரிவித்த அவர், மலாலா யூசுப்சாய் ஒப்பீட்டை எப்படிக் கொண்டு வந்தார் என்பதை வெளிப்படுத்தினார். “அப்பாவை இழந்த பிறகு மன உளைச்சலில் இருந்த என்னை இங்கே போகத் தூண்டியதற்கு நன்றி சஜித்.. நீங்கள் இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்க மாட்டேன். மேலும் இந்த மலாலா தியரியை எனக்குக் கொடுத்தது என் சகோதரி. எனவே குடும்ப ஆதரவு இல்லாமல் ஒரு நபர் ஒன்றுமில்லை" என்று யானா மிர் Xல் எழுதியுள்ளார்.
யானா மிரின் தந்தை ஜனவரி 26 அன்று இறந்தார். இங்கிலாந்தில் சங்கல்ப் திவாஸ் நிகழ்வை நடத்திய ஜேகேஎஸ்சி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஆய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிந்தனைக் குழுவாகும்.