Ads
கனடா செல்ல ஆசைப்படும் யாழ்ப்பாண மக்களுக்கு இலங்கை பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல ஆசைப்படும் யாழ்ப்பாண மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ். மக்களை கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் யாழிலிருந்து 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ள பொலிஸார், கனடாவுக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி யாழில் பெருந்தொகை மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த அறிவுறுத்தியுள்ளார்.
Info
Ads
Latest News
Ads