வாகனமோட்டும் தவறுகளில் சிறை சென்றவர்களின் கதைகள்
கனடாவில் வாகனமோட்டும் தவறுகளில், மாகாண வீதி ஒழுங்கு சட்டங்களின் பிரகாரம் (Provincial Traffic Laws) பண தண்டனை, லைசென்ஸ் பறிமுதல், புள்ளி மதிப்பீட்டு இழப்பு போன்ற விளைவுகளினை மட்டும் பலரும் எதிர் கொண்டிருப்போம். ஆனால், வாகனமோட்டும் சில தவறுகள் குற்றவியல் சட்டங்களின் கீழ் (Criminal Law ) வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலரை சிறைச்சாலை வரையும் இழுத்து சென்றுள்ளது என்பதனை அறிந்துகொண்டீர்களா ?
மதுபோதையில் வாகனம் செலுத்தி பிடிபட்டு சிறை சென்றவர்களின் கதைகள் சொல்ல தேவையில்லை. அது பலரும் அறிந்த விடயமாகும். அதே போல்......
* இன்னொருவருக்கு உடல் காயத்தினையோ அல்லது மரணத்தினையோ உருவாக்க காரணமான
* ஆபத்தான வாகனமோட்டம் (Dangerous or careless driving causing bodily harm or death)
* அதி வேக வாகனமோட்டம். (Racing & Stunt driving )
அதாவது 80 km/h என்பதற்கு கீழே உள்ள வீதிகளில் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வேகத்தினை விட 40 km/h மேலாக வாகனம் செலுத்தி பிடிபட்டால் அது திரில் ஓட்டம் (Stunt driving ) என்ற கிரிமினல் குற்றசாட்டுக்குள் கைதாகின்றார். உதாரணமாக ஆக கூடுதலாக 60km/h வேகத்தில் மட்டும் வரையறுக்கப்பட்ட வீதியில் 101km/h வேகத்தில் வாகனம் செலுத்தினால் கைது செய்யப்படுவார்.
* காயப்படுத்திவிட்டு அல்லது சாகடித்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பி ஓடுபவர்கள். (Hit and run)
மேற்குறிப்பிடப்பட்ட வீதி ஒழுங்கு சட்ட மீறல்கள் கிரிமினல் குற்றச்சாட்டாக பதிவு செய்யப்பட்டு கனடிய நீதிமன்றத்தால் ........
தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.