சிறை தண்டனைக்குள்ளான வருமானவரி ஆலோசகர்கள்
ஓர் படிப்பினைக்காக அறிந்து கொள்ளுங்கள்.
திரு. இமாட் குரும் (Mr.Imad Kutum ) என்பவர் மிசுசாக நகரில் சொந்தமாக கணக்காய்வு கம்பனி வைத்திருந்து, தமது கம்பனி ஊடக வாடிக்கையாளர்களின் வருமானங்களினை அரசுக்கு சமர்ப்பிக்கும் ஓர் பட்டய கணக்காளர் (Chartered Accountant). போலியான நன்கொடை பற்று சீட்டுகள் (Fake charity donation receipts) சமர்ப்பித்து வரி செலுத்தும் பணங்களினை மீதப்படுத்தி கொடுப்பவர் என பெயர் பெற்றவர்.
2003- 2008ம் ஆண்டுகளுக்கு இடையில் 487 பேருக்கு மொத்தமாக சுமார் $3.6 மில்லியன் டொலருக்கு போலியான நன்கொடை பற்று சீட்டுகள் சமர்பித்து ஒரு மில்லியனுக்கு மேல் வரி செலுத்துவதினை மோசடியாக மீதப்படுத்தி கொடுத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு வருடங்கள் சிறை $100,000 டொலர் பண தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆதாரம் : "Tax accountant lands in prison in 3.6 million fraud"
- Toronto Star - May/5/2013
இதே போல் பிரம்ரன் நகரிலிருந்து வருமானவரி ஆலோசகராக பணி புரிந்த,கறுப்பினத்தவரான Mr.John Oladapo Oladehinde என்பவர் 2001-2005ம் ஆண்டுகளுக்கிடையில் சுமார் 1427 பேருக்கு மொத்தமாக $13 மில்லியன் டாலருக்கு போலியான நன்கொடை பற்று சீட்டுகள் ஆதாரமாக காட்டி வருமானவரி தாக்கல் செய்தமையால், இறுதியில் கனடாவினை விட்டு தப்பி ஓடி மீண்டும் 2009ம் ஆண்டு திரும்பி வரும்போது டொரொன்றோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.பண தண்டனை $412,306 மற்றும் இரு வருடங்கள் சிறை என தீர்ப்பு வழங்கப்பட்டது.
...............தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள வீயோடிவைப் பாருங்கள்.