வாகனங்களுக்கிடையில் ஏற்படும் விபத்துகளில் சரி? பிழை ? எந்த பக்கம் என்பதனை நிர்ணயிக்கும் சட்டமூலங்கள் (Accident fault determination rules & regulations) கனடாவின் மாகாண அரசுகளால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இங்குள்ள காணொளியில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களுக்கிடையில் நடைபெறும் விபத்துகளில் தப்பு எவர் பக்கம்? எந்த விகிதத்தில்? என்பதனை துல்லியமாக அவதானிக்கும்போது புரிந்து கொள்ளலாம். சில சந்தர்ப்பங்களில் சமமான விகிதத்தில் தப்புக்குரியவர்களாக இவ் சட்டங்களினால் முடிவு பண்ணப்படுகின்றது.
இவ் காணொளி மூலம் தெளிவு பண்ணப்படும் விரிவான விபரங்களை Google பண்ணி அறிந்துகொள்ளலாம்.
கனடாவில் உள்ள காப்புறுதி கம்பெனிகள் சார்பில் விபத்துகளை புலனாய்வு செய்யும் அரச லைசென்ஸ் பெற்ற மதிப்பாளர்கள் (Independent insurance adjusters ) விபத்து எப்படி நடந்தது ? வாகனகளுக்குரிய பாதிப்புகள் யாவை? சட்ட ஒழுங்குகளின் பிரகாரம் தப்புகள் எவர் பக்கம் என்ற விபரமான அறிக்கைகளை அவரவர் காப்புறுதி கம்பனிகளுக்கு சமர்ப்பிப்பார்கள். காப்புறுதி கம்பனிகளின் இவ் பதிவுகள் C.G.I Inc என்னும் தகவல் மைய நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு இவைகள் வரலாற்று பதிவாக அழியாது பேணப்படும். .அவரவர் விரும்பினால் அதனை நேரடியாகவோ அல்லது காப்புறுதி முகவர் நிறுவனத்தினூடாகவோ பெற்று பரிசீலனை செய்து பார்க்கலாம்.
சில விபத்துகளில் தப்பு எந்த பக்கம் என்பதனை புரிந்து கொள்ளமுடியாத சந்தர்ப்பங்களில், தேவை ஏற்பட்டால் "விபத்துகளின் சிறப்பு புலனாய்வாளர்கள்" (Accident investigation reconstructionist) என்ற துறை சார்ந்த நிபுணத்துவம் உடையவர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து முடிவு பண்ணுவார்கள்.
விபத்து நடந்த இடம், நடந்த வடிவம், அந்தந்த கோணங்களில் அசைவு வேகம், மோதிய கோணல் பாடுகள்,வாகனகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் வடிவங்கள், மோதப்பட்ட இடங்கள், போன்ற பல விடயங்களை விஞ்ஞான ரீதியாக அலசி ஆராய்ந்து இப்படித்தான் நடந்திருக்கும் என்ற தீர்ப்பு அறிக்கைகளைனை சிறப்பு புலனாய்வாளர்கள் வழங்குவது வழமையாகும்.
மேலும் விவரமாக தெரிந்து கொள்ள வீடியோவைப் பாருங்கள்