கனடாவில் வாகன காப்புறுதிகளின் விலையினை தீர்மானிக்கும் இரு ஆவணங்கள்
வாகனம் சொந்தமாக வாங்கும் ஒருவர் அதற்கு காப்புறுதி உடன்படிக்கை செய்வதற்கு மனு செய்யும்போது காப்புறுதி விலைகளை தீர்மானிப்பதில் அவர் தொடர்பாக கனடாவின் காப்புறுதி கம்பனிகள் இரு முக்கியமான ஆவணங்களை முதலில் பரிசீலனை செய்கின்றது. அவ்விரு ஆவணங்களும் ஆங்கிலத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படும்.
(1) AUTOPLUS REPORT
(2) PROVINCIAL DRIVING ABSTRACT
"Autoplus report" என்பதில் தங்களின் பெயர், பிறந்த காலங்கள், வதிவிடங்கள் தொடர்பான விபரங்கள், ஏற்கனவே உரிமையாளராகியிருந்த வாகனங்களின் அடையாளங்களுடன், ஒவ்வொரு வாகனத்துக்கும் எந்தெந்த கம்பனிகளில் வாகன காப்புறுதிகள் இருந்தவை பற்றிய சகல விபரங்கள், இவ் காலங்களில் ஏதாவது விபத்துகளினை எதிர் கொண்டிருந்தால் அது தொடர்பான முழுமையான தகவல்களுடன் அதில் தப்பு எந்த பக்கம்? எவ்வளவு விகிதத்தில் ? என்பவை உட்பட எவ்வளவு தொகை? எந்த கம்பனியில் ? எந்த பிரிவின் கீழ் நட்ட ஈடுகள் பெற்றார் ? என்ற விபரங்கள், வாகன காப்புறுதியில் பதிவில் இருந்த ஏனையோர் பற்றிய விபரங்கள்,என பல விடயங்கள் தங்களின் சாரதி அனுமதி பத்திர இலக்கத்தினை அடையாளமாக வைத்து பதிவில் இருக்கும் .
கனடாவின் சகல வாகன காப்புறுதி கம்பெனிகளுடனும் இணைப்பிலிருக்கும் சி. ஜி . ஐ தகவல் மையம் (C.G.I GROUP INC) என்னும் நிறுவனம் கடந்த சுமார் 25 வருடங்களுக்குள் உள்ள ஒவ்வொருவரின் தகவல்களையும் அவர்களின் சாரதி அனுமதி பத்திரத்தினை அடையாளமாக வைத்து சேகரித்து வைத்திருக்கின்றது. ஆனால் காப்புறுதி கம்பனிகள் இன்றிலிருந்து கடந்த ஆறு வருடங்களுக்குரிய பதிவுகளையே பரிசீலனைக்காக எடுத்துக்கொள்வது வழமையில் நடந்து வருகின்றது.
தாங்கள் ஒவ்வொருவரும் தங்கள் பெயரில் உள்ள இவ் அறிக்கைகளை பெறவிரும்பினால் கீழே இணைக்கப்பட்ட அவர்களின் விண்ணப்பபடிவங்களினை நிரப்பி மின் அஞ்சல் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்பி இலவசமாக பெற்று பரிசீலனை செய்துகொள்ளலாம். தங்கள் காப்புறுதி முகவர் அலுவலகம் ஊடாக உடனடியாகவும் பெற்றுக்கொள்ளலாம். நிறுவனம் பற்றிய தகவல்களை GOOGLE இணைய தளத்தினூடாகவும் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு தங்களின் "AUTO PLUS REPORT" அறிக்கையினை எடுத்து பரிசீலனை செய்து பார்க்கும்போது அதில் தப்பான முறையிலும் பதிவுகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். அங்கு ஏதாவது திருத்தங்கள் செய்யவிரும்பினால் எந்த வாகன காப்புறுதி கம்பனியினால் பதிவுகள் வழங்கப்பட்டதோ அந்த கம்பனியின் வாடிக்கையாளர் நியாயமன்றங்களின் (Example : Insurance Ombudsman offices) ஊடக சரியான நிரூபணங்கள் மூலம் பதிவுகளில் திருத்தங்கள் செய்ய முயற்சிக்கலாம்.
வாகன காப்புறுதிகளின் விலைகளை தீர்மானிக்கும்போது இரண்டாவதாக பரிசீலனை செய்துகொள்ளும் முக்கியமான ஆவணம் "Provincial Abstract Record " ஆகும். இதில் வாகனம் செலுத்தும் சாரதி அனுமதி பத்திரம் தொடர்பான விபரங்களுடன் ..........
தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.