Ads
பிரபாகரனின் பிறந்த தினத்தை நினைவேந்தல் என்று அனுஷ்டிக்க இடமளிக்க முடியாது - பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்
பிரபாகரனின் பிறந்த தினத்தை நினைவேந்தல் என்று அனுஷ்டிக்க இடமளிக்க முடியாது. எதிர்காலத்தில் இவ்வாறு செயற்பட்டால் கைதுகள் தொடரும். பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டின் சட்டம். தேசிய பாதுகாப்புக்கு முரணான செயற்பாடுகளுக்கு இடமளித்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகவே முறையற்ற வகையில் செயற்பட வேண்டாம் என தமிழர் பிரதேசத்துக்கு குறிப்பிடுங்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தமிழ் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (05) தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த பயங்கரவாத தடைச்சட்டம் கீழான கைதுகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Info
Ads
Latest News
Ads