Ads
மண்மேடு சரிந்து விழுந்ததில் ரயில் சேவைகள் பாதிப்பு
மலையக ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.மலையக ரயில் பாதையில் இந்தல்கசின்ன மற்றும் ஓஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் 148/6 மைல்கட்டை பகுதியில் இன்று (06) மாலை 4 மணி அளவில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. பெய்து வரும் கடும் மழையினால் குறித்த ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயங்கும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் உரிய பாதையை சீரமைக்கும் வரை நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும்.
Info
Ads
Latest News
Ads