டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 77,487 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் விசேட பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலையினால் குறித்த பகுதிகளில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், குறித்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு நோய் உறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து இனங்காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.