தேஷ்பந்து தென்னகோனுக்கு அரசியலமைப்பு சபை அனுமதி
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதில் பொலிஸ் மா அதிபராக அண்மையில் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த நியமனம் 29.11.2023 முதல் 03 மாத காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய சி.டி விக்ரமரத்ன கடந்த 25ஆம் திகதி தனது பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.