சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று வெள்ளிக்கிழமை (1) கைது செய்யப்பட்டுள்ளார். பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து நவம்பர் 29 இலங்கை வந்தடைந்திருந்தார்.
போதகர் ஜெரோம் நாடு திரும்பி 48 மணநேரத்திற்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அவர் நேற்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை 8 மணிநேர வாக்குமூலம் வழங்கியதுடன் மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை (1) வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்து வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ 2 ஆம் நாள் வாக்குமூலம் வழங்கிய நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போதகரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.