சினிமா செய்திகள்
ராணுவ வீரர்களுக்கு சொத்தை எழுதிக் கொடுத்த நடிகர் சுமன்
இன்று அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று சொத்துக்காக அடித்து கொள்ளும் இந்த காலத்தில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சொத்தை எழுதிக் கொடுத்த நடிகர் சு
நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலா போட்ட கண்டிஷன்
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா என்ற நடிகைய
விஜய் மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் பதிலடி
தவெக மாநாட்டை தொகுத்து வழங்கியவர் துர்கா தேவி(28). தனியார் கல்லூரி விரிவுரையாளர். இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. விஜயின் ரசிகையாக இருந
மாநாட்டில் வேறு விஜய்யை பார்ப்பது போல் இருந்தது என தெரிவித்த நடிகை ராதிகா
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதிகா தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவ
ஒல்லியான தோற்றத்துக்கு மாறிய மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
இணையத்தில் வைரலாகி வரும் ஸ்ரேயாவின் புகைப்படம்
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
கங்குவா எனக்காக எழுதின கதை - ரஜினிகாந்த்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து தயாராகியுள்ள படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவே
'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் 'நந்தன்'. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன
டி. ராஜேந்தர் பாடல் வரிகளை வியந்த கண்ணதாசன்
தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்த ஒரு பாடலுக்கு கண்ணதாசன் வியந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் பல்துறை வி
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
Ads
 ·   ·  7998 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பிறந்த நாளுக்கு கேக்வெட்டியவர்களையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர் - இரா.சாணக்கியன்

நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைதுசெய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை அவர் கண்டு மௌனமாக இருப்பாரானால் அவரின் செயற்பாடுகளை அவர் ஏற்றுக்கொள்கின்றார் என்றே பார்க்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று (29) மட்டக்களப்பு வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அண்மையில் தரவை துயிலும் இல்லத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து அவருடன் கலந்துரையாடியுள்ளார்.

மாவீரர் துயிலும் இல்லம் என்ற பதாகை வைக்கப்பட்டதன் காரணமாக மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் உட்பட நான்கு பேரை கைது செய்து அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு தினங்களை கடந்துள்ள நிலையில் இதுவரையில் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து கேள்வியெழுப்பியபோதிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளதன் காரணமாக அவர்களை மூன்று தினங்கள் வைத்து விசாரணை செய்த பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியும் என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் என்று சர்வதேசத்திற்கு கூறிவிட்டு இங்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று வவுணதீவு பிரதேசத்தில் பிறந்த நாளுக்கு கேக்வெட்டியவர்களையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

  • 314
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads