இலங்கையில் நேற்று 11 கொரோனா மரணங்கள் பதிவு
கொவிட் 19 தொற்றால் நேற்றைய தினம் (04) 11 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார். அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய,
1. கோன்கஹவெல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஆண் ஒருவர், மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 03 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நியூமோனியா மற்றும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கபட்டமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2. தியதலாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய ஆண் ஒருவர், தியதலாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 03 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நுரையீரல் அழற்சி மற்றும் நுரையீரல் உட்புறக் கலங்கள் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. மாலபே பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 94 வயதுடைய பெண் ஒருவர், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 03 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, இதயநோய் மற்றும் உயர் குருதியழுத்த நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. மஹரகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 62 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 03 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நாட்பட்ட ஈரல் நோய், நீரிழிவு மற்றும் மூச்சிழுப்பு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. அரநாயக்க பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் மாவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 03 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார் கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்காளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
6. வல்கம்முல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 04 ஆம் திகதி அன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
7. வேயங்கொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய பெண் ஒருவர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 04 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
8. தழுபொத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 49 வயதுடைய பெண் ஒருவர், மினுவங்கொட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 02 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
9. மொரட்டுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்க மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே மாதம் 03 திகதி அன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
10. குருநாகல் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 04 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, உயர் குருதியழுத்தம், நீரிழிவு, நாட்பட்ட சிறுநீரக் நோய் மற்றும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
11. வஸ்கடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 03 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.