மன்னர் சார்லசின் விருதை நிராகரித்த இந்திய கோடீஸ்வரர்
இந்திய கோடீஸ்வரரான ரத்தன் டாடா, உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் மட்டுமல்ல, அவர் ஒரு பெரும் கொடையாளரும்கூட. ஆகவே, உலகமே அவரை மதிக்கிறது, புகழ்கிறது.
2018ஆம் ஆண்டு, இளவரசர் சார்லஸ், ரத்தன் டாடாவுக்கு விருது வழங்கி கௌரவிக்க அழைப்பு விடுத்திருந்தார். பக்கிங்காம் மாளிகையில் ரத்தன் டாடாவுக்கு விருது வழங்குவதற்கான ஆயத்தங்கள் தடபுடலாக நடந்துகொண்டிருந்திருக்கின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக இந்தியாவிலிருந்து மற்றொரு தொழிலதிபரான Suhel Seth என்பவர் இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார். லண்டன் சென்றடைந்த Suhel Seth, தனக்கு டாடாவிடமிருந்து 11 மிஸ்டு கால்கள் வந்துள்ளதை கவனித்துள்ளார்.
உடனடியாக டாடாவை அவர் மொபைலில் அழைக்க, அவரிடம் தன்னால் சார்லஸ் ஏற்பாடு செய்துள்ள விருது வழங்கும் விழாவுக்கு வரமுடியாது என்று கூறியுள்ளார் டாடா. உடனே Suhel Seth டாடாவிடம், இது இளவரசர் சார்லஸ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி, எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இப்போது நான் இளவரசர் சார்லசிடம் என்ன சொல்வது என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு டாடா, டிட்டோவுக்கு உடல் நலமில்லை, அதை விட்டு விட்டு என்னால் இங்கிலாந்துக்கு வரமுடியாது என்பதுதான். டிட்டோ என்பது டாடா வளர்க்கும் நாய்களில் ஒன்று. தன் நாய்கள் மீது அதீத பிரியம் கொண்டவர் டாடா. தனது நாய்களில் ஒன்றுக்கு உடல் நலமில்லை என்பதால், தன்னால் அதை விட்டு விட்டு விருது வாங்க பிரித்தானியாவுக்கு வரமுடியாது என்று டாடா கூறியுள்ளார்.
Suhel Seth அதை இளவரசர் சார்லசிடம் கூறியிருக்கிறார். Suhel Seth சொன்னதைக் கேட்ட சார்லசின் பதிலும் ஆச்சரியமாக இருந்துள்ளது. அதுதான் டாடா, அதனால்தான் அவரது வீடு அவ்வளவு உறுதியாக இருக்கிறது, அதனால்தான் அவரது நிறுவனமும் உறுதியாக நீடித்துக்கொண்டிருக்கிறது என்று வியப்புடன் கூறினாராம் சார்லஸ்!