Category:
Created:
Updated:
கனடாவில் மருந்துகள் வாங்குவதற்கு அரச காப்புறுதி திட்டங்கள், தொழில் செய்யும் இடங்களின் குழுவான காப்புறுதி திட்டங்கள் (Group Insurance Plans), மற்றும் தனியார் காப்புறுதி திட்டங்கள் (Private drug plans ) என வைத்திருந்து அவற்றினூடாக மருந்து செலவுகள் கொடுப்பனவு செய்யப்பட்டாலும், சில நோயாளிகளின் கடுமையான நோய்களுக்குரிய விசேட மருந்துளுக்குரிய செலவுகள் சொந்த பணம் கொடுத்தே வாங்கவேண்டிவரலாம். முக்கியமாக கான்ஸர் நோயாளிகள் பலருக்கு அந்த நிலைமை ஏற்பட்டிருந்தது.
ஆனால் இவ்வாறு பணம் செலுத்தியவர்கள் இவ் செலவுகளை மாகாண அரசுக்கு விண்ணப்பித்து மீள பெற முயற்சிக்கலாம். அதனை "EXCEPTIONAL ACCESS DRUG PROGRAM - ONTARIO MINISTRY OF HEALTH" என குறிப்பிடப்படுவதுண்டு.