Category:
Created:
Updated:
கனடாவில் அவசர சேவைகளான போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைக்கும் படையினரை அழைக்கும் 911 என்ற இலக்கத்துக்கு அழைக்கும்போது சில நேரங்களில் சிலருக்கு கனடாவின் உத்தியோகபூர்வ மொழியான ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் தொடர்புகொள்வது சிரமமாக இருக்கலாம்.
அவசரம்,பதட்ட நிலைமைகளில் அவசரப்பிரிவினர் கேட்கும் கேள்விகளுக்கு அந்நிய மொழியில் பதில் வழங்குவதில் தடுமாற்றங்களும் வரலாம். எனவே இந்த நிலைமைகளினை எதிர்கொள்ளவேண்டிவந்தால் மொழி தெரியவில்லை என்ற வருத்தம் தேவையில்லை.
"I need Tamil translator" அல்லது "Tamil" என குறிப்பிடுங்கள். உடனடியாக தமிழ் மொழி பெயர்ப்பாளர் தொடர்பில் வருவார். இதே போன்று சுமார் 150 க்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு சேவை அவசர இலக்கத்துக்கு கனடாவில் அழைக்கும்போது கிடைக்கும்.