இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ரத்து செய்த கனடா விமான சேவை
இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடாவின முதனிலை விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
கனடாவின் எயார் கனடா விமான சேவை இஸ்ரேலுக்கான பயணங்களை ரத்து செய்துள்ளது.
கனடிய நகரங்களுக்கும் இஸ்ரேலின் தெல் அவீவ் நகருக்கும் இடையிலான சகல நேரடி விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் முழுவதும் இந்த விமான சேவை இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
போர் நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எயார் கனடா விமான சேவை தெரிவித்துள்ளது. ரொறன்ரோ மற்றும் மொன்றியால் ஆகிய நகரங்களில் இருந்து இஸ்ரேலுக்கு நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 31-ஆம் திகதி வரையில் பதிவு செய்த அனைத்து விமான பயணங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன் பதிவு செய்து கொண்டவர்களுக்கு கட்டணம் மீள அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.