உழைக்கும் மக்களின் சேமலாப நிதியை அரசாங்கம் பிட்பொகட் அடித்துள்ளது - சஜித் பிரேமதாச
உலகில் பல நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்தாலும், கொடுக்கல் வாங்கல் செய்யும் போது அந்நாடுகள் கூட தங்கள் நாட்டின் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் மக்களின் ஊழியர் சேமலாப நிதியங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு அழுத்தம் பிரயோகித்து தேசிய கடனை மறுசீரமைத்த ஒரே நாடாக எமது நாடு சாதனை படைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தை நாடிய எந்த நாடும் உழைக்கும் மக்களின் நிதியில் கை வைக்கவில்லை என்றும், ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கவில்லை என்றும், எமது நாட்டில் ஊழியர் சேமலாப நிதியத்தை திருடும் முயற்சியையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நிதியை திருடிய பின்னர் தரவுகள் இல்லை என்கின்றனர் எனவும், தரவுகளை சமர்ப்பிக்க பல மாதங்களாகும் என்கின்றனர் என்றும், இது நகைச்சுவையான விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.
பெரும் செல்வந்தர்களுக்கு மாத்திரம் சலுகைகளையும் நன்மைகளையும் வழங்குவதற்கு முடியாது என்றும், அரசாங்கத்திற்கு ஏற்றால் செயற்படுவதற்கு இந்த அரசாங்கத்திற்கு ஆணையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய கடனை மறுசீரமைப்பதன் மூலம் நமது நாட்டின் தொழிலதிபர்கள், பெரும் செல்வந்தர்கள், பணக்காரர்கள் மற்றும் வங்கிகளுக்கு நிவாரணம் வழங்கி உழைக்கும் மக்களின் சேமிப்பை பிட்பொகட் அடித்த இந்த அரசாங்கம், அவ்வாறு எதனையும் மேற்கொள்ளவில்லை என தற்போது கூறிவருவதாகவும், இது நகைச்சுவையானது என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சியாக, சாமானிய மற்றும் உழைக்கும் சகல மக்களுக்களின் நலனுக்காக எழுந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.