நாட்டின் நிலைமை ஆபத்தானது.....எந்தப் பிரச்சினையும் இல்லாது போல் அரசாங்கம் செயற்படுகிறது - எதிர்க்கட்சித் தலைவர்
அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டு லிட்ரோ எரிவாயு விலையை 343 ரூபாவால் அதிகரித்தல்,நீர் கட்டணத்தை அதிகரித்தல், மின்சார கட்டணத்தை 3 ஆவது முறையாகவும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ள சூழ்நிலையால் நாட்டு மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொருளாதாரத்தை விரிவாக்குவதற்கு பதிலாக பொருளாதாரத்தை சுருக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பதால் மக்களின் வருமான மூலங்கள் குறைந்துள்ளன என்றும், இதனால் மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ள தருணத்தில் எரிவாயு, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை அதிகரிக்க எடுக்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று வியாழக்கிழமை (5) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.