சினிமா செய்திகள்
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
கங்குவா படத்துக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரா
வேட்டையன் படத்தை பின்னுக்குத் தள்ளியது சிட்டாடல்
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர்,
டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போதுதான் யாஷ
பூனம் பாஜ்வா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூனம் பாஜ்வா. சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை க
கமலஹாசனின் பிறந்தநாளான இன்று தக் லைஃப் படத்தின் டீசர் வெளியீடு
கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளான இன்று ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத
அபிஷேக்பச்சனுக்கு பெருமையைக் கொடுத்த ஐஸ்வர்யா ராய்
கடந்த 2007ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.இத்தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள்
பிக்பாஸ் விக்ரமன் நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார்
பிக்பாஸ் சீசன் 6ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த விக்ரமனுக்கு பார்வையாளர்களின் நீடித்த ஆதரவு கிடைத்ததால், அவர் வெற்றி பெறுவார் என பலரும் நம்
ஒரு நாளைக்கு 100 சிகரெட் புகைப்பேன் - ஷாருக்கான்
ஷாருக்கானுக்கு கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு
 ‘பிளடி பெக்கர்’ படம் படுதோல்வி
தீபாவளி அன்று திரைக்கு வந்த கவின் நடித்த "பிளடி பெக்கர்" என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இந்த படத்தின் தமிழக விநியோகஸ்தருக்கு சுமார் 8 கோட
 விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்த நடிகை விஜயலட்சுமி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கொள்கைகள் குறித்தும் அவரது கருத்துகள் குறித்தும் சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர், "லாரியில் அடிபட்ட
Ads
 ·   ·  8036 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் : விக்னேஸ்வரன்

நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் என்பது ஒரு அரசாங்கத்தினுடைய கடமையாக காணப்படுகின்றது. அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்க முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரம் தொடர்பில் யாழில் சனிக்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .நீதியை நடைமுறைப்படுத்தும் நீதித்துறைக்கு பங்கம் ஏற்படும் விதத்திலே யாராவது நடந்து கொண்டால் உடனடியாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நீதிபதிக்கு தொல்லைகள் கொடுக்கக் கூடாது. ஆனால் இலங்கையில் நடைபெறுவது இவ்வாறான செயற்பாடுகள் அல்ல எல்லாமே ஒரு சிங்கள பௌத்த சிந்தனையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.ஆகவே, ஒரு தமிழருக்கு சார்பாக ஒரு தமிழ் நீதிபதி தீர்ப்பு கொடுத்தால் ஒரு முஸ்லிமிற்கு சார்பாக ஒரு முஸ்லீம் நீதிபதி தீர்ப்புக் கொடுத்தால் சிங்களவர்கள் ஏதோ அவர்கள் தமிழர்களாக இருப்பதால் தான் இவ்வாறு தீர்ப்பு கொடுத்திருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்களே தவிர சிங்கள நீதிபதிகள் சிங்களவர்களுக்கு சார்பாக நீதி கொடுக்கின்றார்கள் என்று சிந்திப்பதில்லை.இதில் நான் தெரிவிப்பது நீதிபதிகள் சட்டத்தின் படி நடக்க தான் அவர்களிற்கு நாங்கள் பயிற்சி கொடுத்திருக்கின்றோம். அவர்கள் இவ்வாறு தான் செய்கின்றார்களே தவிர அதில் தமிழர், சிங்களவர் என்று பாகுபாடு பார்த்து அவர்கள் இதனை செய்யவில்லை இவ்வாறு நினைப்பது பிழையான ஒரு சிந்தனையாகும்.இந்த சிந்தனையில் தான் இவ்வாறு இந்த நீதிபதிக்கு நடந்திருக்கின்றது என்பதுக்கு தெரிகின்றது.இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒன்றில் அவரை திரும்ப வரவழைத்து போதிய பாதுகாப்பு கொடுத்து அவரை மீண்டும் அதே பதவியை வகிக்க செய்யலாம். இது நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்கின்றதா என்பது தெரியவில்லை.ஆனால் அரசாங்கம் ஒன்றை கவனத்தில் எடுக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தாவிட்டால் சிங்கள மக்களிக்குமிடையே இது மாதிரியான நிலைமைகள் ஏற்பட்டு பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.ஈஸ்ரர் தாக்குதலை எடுத்துப்பார்த்தோமாக இருந்தால் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட்தாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அவ்வாறு அல்ல. இது யாரோ ஒருவரின் அரசியலுக்காக ஒரு நாடகமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதே இங்கு பிரதானமாகும்.அனைத்தையும் தீர விசாரித்து செயற்பாடு வேண்டும் என்பதே எனது பிரதான கருத்தாகும் எனவும் தெரிவித்தார்.

  • 266
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads