Category:
Created:
Updated:
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை தப்பிக்க வைக்கும் திட்டத்திற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.