Ads
வாழைப்பழ சீப்பை கொடுத்தவர் கைது.
வாழைக்குலையில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரேயொரு சீப்பை எடுத்துச் சென்று கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், களுத்துறையில் இடம்பெற்றுள்ளது. களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகளை பார்வையிடுவதற்கு வாழைப்பழ சீப்புடன் ஒருவர் சென்றுள்ளார்.
அந்த வாழைப்பழ சீப்புகளுக்குள் 3 மற்றும் 4 அங்குல ஸ்டோக்கள் 16 இருந்துள்ளன. அதற்குள் இருந்து போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் களுத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Info
Ads
Latest News
Ads