பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு - 50க்கும் மேற்பட்டோர் பலி
பாகிஸ்தானில் மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் கொடிக்கட்டி பறக்கிறது. அங்கு அவ்வபோது குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அவர்களின் அட்டூழியங்கள் ஓய்ந்த பாடில்லை. இந்த நிலையில், மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் நகரில் உள்ள மஸ்டங் பகுதியில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இந்த மசூதியில் வெள்ளிக்கிழமையையொட்டி இஸ்லாமியர்கள் பலர் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அந்த மசூதியின் அருகே பயங்கர சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. ஈத்-இ-மிலாத்-உன்-நபி பெருநாள் ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மசூதிக்கு அருகில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த இடத்தில், பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த தாக்குதல் தற்கொலை படை தாக்குதல் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது.