கனடாவுடன் இணைந்து செயல்படுங்கள்! – இந்தியாவிற்கு ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு
இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இந்திய தூதரக அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதாக அவரை நாட்டை விட்டு கனடா வெளியேற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடியாக இந்திய அரசும் கனடா தூதரை வெளியேற உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது நிஜ்ஜார் கொலை வழக்கில் நீதி கிடைக்க இந்தியா ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
\
இதுகுறித்து பேசியுள்ள அவர் “இந்த கொலை வழக்கு விவகாரத்தை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொண்டு நீதியை உறுதிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.